லண்டன் நடைபெறவிருந்த சுமந்திரனின் கூட்டம் திடீர் நிறுத்தம் .!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலண்டன் கிளையின் ஏற்பாட்டில் அரசியல் தீர்வுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வியூகம் என்னும் தலைப்பில் லண்டனில் நடைபெறவிருந்த புலம்பெயர்ந்தவர்களுடனான கலந்துரையாடல் திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மலையில் லண்டனில் மேற்படி கூட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்,ஏ.சுமந்திரனின் பங்கேற்புடன் நடைபெறவிருந்தது.

இருப்பினும் அநாமதேய தரப்பினரின் எதிர்மறையான அறிவிப்புக்கள் மற்றும் பிரசாரங்களை அடுத்து வீணான குழப்பங்களை தவிர்த்துக்கொள்ளும் வகையில் மேற்படி கூட்டம் இறுதி தருணத்தில் இரத்துச் செய்யப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளதாக லண்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இன்றும் நாளையும் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கனடா கிளையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுமந்திரன் எம்.பி லண்டனில் இருந்து நேற்று கனடா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளதாக அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

தாயகச்செய்திகள்