மஹிந்தவுடன் மைத்திரியின் மகள்! நீண்ட நேர உரையாடல்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ் மற்றும் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளின் சந்திப்பு கொழும்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிபால கம்லத்தின் மகள் ரஞ்சா, டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் அகால மரணமடைந்தார்.

அன்னாரின் இறுதிக் கிரியை நடவடிக்கைகள் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறுமட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பொலநறுவை சென்றிருந்தார்.

விசேட ஹெலிப்கொப்டர் மூலம் சென்றிருந்த மஹிந்த, ரஞ்சனாவின் இறுதி சடங்கு நிகழ்வில் பங்கேற்றார்.

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா சிறிசேனவுடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நீண்ட நேர கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது ஜனாதிபதியின் சகோதரரும் உடன் இருந்தார். சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

கடந்த காலங்களில் ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களை தண்டிக்கப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.

அத்துடன் இதற்கான ஒப்ரேசன்-2 நடவடிக்கை ஆரம்பித்துள்ளதாகவும் இதிலிருந்து மோசடியாளர்கள் தப்பித்துக் கொள்ள முடியாது என ஜனாதிபதி தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில், மஹிந்த – சத்துரிக்கா சிறிசேனவின் சந்திப்பு தொடர்பில் கொழும்பு அரசியல் மட்டத்தில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.

Allgemein