இன்றே பதவி துறந்து வீடு செல்ல தயார் – ஜனாதிபதி

எனது பதவிக் காலம் குறித்து நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியது, சிறந்த இலங்கையொன்றை கட்டியெழுப்புவதற்கான கனவொன்று தன்னிடம் உள்ளதனாலேயாகும் எனவும், மாறாக அதிகாரத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்ற காரணத்தினால் அல்ல எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மாத்தறை மாவட்டத்தில் போட்டியிடும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கு ஆதரவு திரட்டும் முதலாவது கூட்டம் இன்று(12) அக்குரஸ்ஸயில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

நான் நாளைக்கு அல்ல, இன்றே பதவி துறந்து வீடு செல்ல தயார். எனக்கு அதிகாரத்தில் இருக்கவேண்டும் என்ற தேவையொன்று இல்லை. இருப்பினும், சிறந்த இலங்கையொன்றை கட்டியெழுப்பும் கனவு என்னுள் உள்ளது. நான் எனது பதவிக் காலம் குறித்து நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியமை குறித்து யாரும் பிரச்சினைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Allgemein