அமெரிக்க தூதரக பிரதிநிதிகள் – முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தளபதி சந்திப்பு!!

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் அரசியல் விதித் துணைத் தலைவரும் அரசியல் அதிகாரியுமான திரு பட்ரிக் திலோவ் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத்தளபதியான மேஜர் ஜெனரல் துஸ்யந்த ராஜகுருவை சந்தித்துள்ளார்.

நேற்று முன்தினம் முல்லைத்தீவு பிரதேசத்திற்கான சுற்றுலாப் பயணத்தை மேற்கொண்டபோதே குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

இந்த சந்திப்பின்போது இருதரப்பினருக்குமிடையிலான கருத்துக்கள் மற்றும் முல்லைத்தீவுப் பிரதேசம் பற்றிய தற்போதைய நிலைமைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Allgemein