மட்டக்களப்பில் பெற்றோல் குண்டு தாக்குதல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை பற்று பிரதேச சபைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சாமித்தம்பி சிவபாதசுந்தரத்தின் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த குண்டுத் தாக்குதல் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரது வீட்டின் மீதே இந்த குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் இந்த தாக்குதலினால் எவருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் உட்பட மூவர் மீது சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள போதிலும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தாயகச்செய்திகள்