கலிபோர்னியா நிலச்சரிவு – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலச்சரிவில் சிக்கி பலர் காணாமல் போயுள்ள நிலையில் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

கலிபோர்னியா மாநிலத்தில் தென் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த அடை மழைகாரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், சாண்டா பார்பரா நகரில் நிலச்சரிவு ஏற்பட்டிருந்தது.

இந்த நிலச்சரிவில் சிக்கி மேலும் 28 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சுமார் 100 வீடுகள் முற்றாக அழிந்துள்ளதாகவும், 300க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இதுவரை சுமார் 50 பேர் வரை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த அனர்த்தத்தில் சிக்கி காணாமல் போயுள்ளவர்களை மீட்கும் பணிகளை மீட்புப்பணியாளர்கள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்ற நிலையில், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

Allgemein உலகச்செய்திகள் செய்திகள்