மஹிந்த ராஜபக்சவின் வாகனம் மோதி மூவர் படுகாயம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப் பிரிவுக்குச் சொந்தமான ஜீவ் வண்டியில் மோதி மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாத்தறை – கம்புறுப்பிட்டிய – மலான பிரதேசத்திலுள்ள முதியோர் இல்லத்திற்கு அருகில் இடம்பெற்றதாக கம்புறுப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப் பிரிவுக்குச் சொந்தமான ஜீவ் வண்டியுடன் முச்சக்கர வண்டி மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

வீதியில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முச்சக்கர வண்டி முயற்சித்தபோது எதிரே வந்த பாதுகாப்பு பிரிவின் ஜீவ் வண்டியுடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து இடம்பெற்ற இடம்பெற்ற பகுதியில் வாகனம் முந்திச் செல்ல தடை என்பதை வீதிப் போக்குவரத்த சமிக்ஞை ஊடாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ள போதிலும் முச்சக்கர வண்டி சாரதியின் கவனயீனத்தினால் இந்த விபத்து நேர்ந்திருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்தில் முச்சக்கர வண்டியை செலுத்திய 19 வயதுடைய இளைஞன் உட்பட 17 மற்றும் 45 வயதுடைய இருவரும் காயமடைந்த நிலையில் கம்புறுப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்புறுப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Allgemein