பதவி காலம் தொடர்பில் சந்தேகம் – உயர்நீதிமன்றம் சென்றார் ஜனாதிபதி!

19வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்களா அல்லது 6 வருடங்களா என்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர்நீதிமன்றில் வினவியுள்ளார்.

அதன்படி , குறித்த தீர்மானம் எதிர்வரும் 14ம் திகதி அல்லது அதற்கு முன்னர் பெற்றுக்கொடுக்கப்படும் என பிரதம நீதியரசர் அறிவித்துள்ளார்.

1978ம் ஆண்டு அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய 6 வருட பதவி காலம் கிடைக்கப்பெற்றாலும் பதவி காலத்தை 5 வருடங்கலாக குறைக்க 19வது அரசியலமைப்பு திருத்தத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

குறித்த அரசியலமைப்பு திருத்தம் மேற்கொண்ட காலப்பகுதியில் இருந்த ஜனாதிபதிக்கும் குறித்த தீர்மானம் பொருந்துமா என இந்த கோரிக்கையில் வினவப்பட்டுள்ளது.

அதன்படி , மேல் குறிப்பிட்ட விடயங்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 11ம் திகதி ஆராய தீர்மானித்துள்ளதாக உயர்நீதிமன்ற பதிவாளர் இலங்கை சட்டத்தரணி சங்கத்திற்கு அறிவித்துள்ளார்.

Allgemein