வேட்பாளர் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் மாவட்டம் சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

சாவகச்சேரியின் முன்னாள் நகரசபை உறுப்பினர் சற்குணநாதன் என்பவர் இன்று(06.01) காலை ஈபிடிபி வேட்பாளர் ஒருவரின் வீட்டிற்கு சென்று தனக்கு ஆதரவு வழங்கும்படி கேட்டிருக்கின்றார்.

இதன் போது அந்தவீட்டில் இருந்த ஈபிடிபியின் வேட்பாளர் சற்குணநாதன் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கு இலக்கான நபர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Allgemein தாயகச்செய்திகள்