தேர்தல் பிரசாரம் செய்வோர் இதனை வாசிக்க தவறாதீர்கள்!!

உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான காரியாலயங்கள், பதாதைகள் மற்றும் சுவரொட்டிகள் என்பனவற்றை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அகற்றிக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

அத்துடன் தேர்தல் பிரசார செயற்பாடுகள் அடுத்த மாதம் 7 ஆம் திகதி நள்ளிரவு வரை மேற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Allgemein