தென்கொரியாவில் உயர்மட்ட பேச்சுவார்த்தையில் வடகொரியா!!

தென்கொரியாவில் உயர்மட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு வடகொரியா இணக்கம் தெரிவித்துள்ளது.

தென்கொரிய அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பு எதிர்வரும் 9ம் திகதி நடைபெறவுள்ளது.

இதன்போது அடுத்த மாதம் தென்கொரியாவில் நடைபெறவுள்ள பனிக்கால ஒலிம்பிக் போட்டிகளில், வடகொரிய மெய்வல்லுனர்கள் பங்குபற்றுவது தொடர்பில் முக்கிய அவதானம் செலுத்தப்பவுள்ளது.

வட-தென் கொரியாக்களுக்கு இடையில் ஐக்கியத்தை வெளிப்படுத்த, விளையாட்டு ஒரு சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என்று, வடகொரியாவின் தலைவர் கிம் ஜொங் உன் தெரிவித்திருந்தார்.

இதன் அடிப்படையிலேயே இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

Allgemein உலகச்செய்திகள்