உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கனேடிய அணி சார்பாக 3 ஈழ தமிழ் இளைஞர்கள்!

கடல் கடந்து வாழும் ஈழத்தமிழ் இளைஞர்கள் உலகில் வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள போட்டிக்கு மத்தியிலும் அவர்களது தனி திறமைகளை வெளிக்காட்டி தமிழ் தேசத்திற்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.

இம் மாதம் 14 ஆம் திகதி நியூசிலாந்தில் நடைபெறவுள்ள 19 வயதிற்கு உட்பட்ட உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் கனடா அணியின் சார்பாக மூன்று ஈழத்தமிழ் இளைஞர்கள் விளையாட இருக்கின்றனர்.

காவியன் நரேஸ் சாமுவேல் கிரிசான் மற்றும் ஏரன் பத்மநாதன் ஆகிய மூன்று வீரர்களுமே களமிறங்கவுள்ளனர். காவியன் நரேஸ் சிறந்த துடுப்பாட்ட வீரனாகவும் சாமுவேல் கிரிசான் சிறந்த சுழல் பந்து வீச்சாளராகவும் ஏரன் பத்தமநாதன் சிறந்த விக்கெட் காப்பாளராகவும் செயல்பட்டு கனேடிய அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.

இந்த போட்டியில் முதல் கட்டமாக கனடா அணியோடு இங்கிலாந்து பங்காளதேசம் மற்றும் நமிபியா அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி தமிழன் பெருமையை பறை சாற்ற வேண்டுமெ ஈழ தமிழ் மக்கள் பலரும் தங்களது வாழ்த்து செய்தியை இந்த தெரிவித்து வருகின்றனர்.

Allgemein உலகச்செய்திகள்