இலங்கையில் அதிர்ச்சிமிக்க பாரிய நகரம் ஒன்றைகாணலாம்!

இலங்கையில் அதி நவீன வசதிகளைக் கொண்ட நகரம் ஒன்றை உருவாக்கும் திட்டம் இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது இரண்டு லட்சம் மக்கள் வாழ்கின்ற ஒரு பாரிய நகரமாக மாற்றப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்றைய தினம் கொழும்பு துறைமுக நகரத்தைப் பார்வையிடுவதற்காக நேரில் சென்றபோது ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுகுறித்து மேலும் தெரிவித்த அவர்,

„இந்தக் கடலை கல்லு மண் கொண்டு நிரப்பி இன்னும் சில வருடங்களில் பாரிய நகரம் ஒன்றை ஏற்படுத்துவதோடு, இரண்டு இலட்சம் மக்கள் வாழ்வதற்கு ஏற்றவகையில் மிகவும் அழகான நவீன முறையில் நிர்மாணிக்கவுள்ளோம். சீன துறைமுக நிறுவனத்தின் பிரதான முதலீடாக உள்ள இங்கே சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருக்கும் வசதிகள் அனைத்தும் பெற்றுக்கொடுக்கப்படும்.

2020 ஆம் ஆண்டு ஆகின்றபோது இந்த துறைமுக நகரத்தின் அடிப்படை வேலைத்திட்டங்கள் மற்றும் ஏனைய கட்டட வேலைகள் யாவற்றையும் பூர்த்தி செய்ய இருக்கின்றோம். இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையத்திற்கான வேலைத்திட்டங்களில் ஒரு பகுதியாக உள்ள இங்கு, நாங்கள் நினைத்தும் பார்க்க முடியாத நகரம் ஒன்று அமையப்போகின்றது.“ என்றார்.

Allgemein