யாழில் நீதிபதி மா.இளஞ்செழியன் தலைமையில் தமிழில் தேசிய கீதத்துடன் பணிகள் ஆரம்பம்!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மற்றும் சட்டத்தரணிகள் ஆகியோர் இன்றைய தினம் சத்தியப்பிரமாணம் செய்து இவ்வருடத்திற்கான தமது பணிகளை சம்பிரதாயப்பூர்வமாக ஆரம்பித்துள்ளனர்.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தலைமையில் சட்டத்தரணிகள் சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்திலுள்ள நீதிமன்றங்களின் உத்தியோகத்தர்கள் அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக இன்றைய தினம் உறுதியுரை எடுத்துள்ளனர்.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தேசிய கொடியை ஏற்றி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்துள்ளார்.

இதேவேளை, தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டதுடன், சட்டதரணிகள் மற்றும் நீதிபதிகள் அனைவரும் ஒன்று கூடி சத்திய பிரமாணத்தை மேற்கொண்டுள்ளனர்.