தமிழீழ விடுதலைப் புலிகளின் பேரூந்து தற்போதும் பயன்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழீழ போக்குவரத்து கழக நிர்வாகத்தின் மக்கள் சேவை பேருந்து ஒன்றினை இலங்கை இராணுவத்தினர் இன்னமும் பயன்படுத்திவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

2009ஆம் ஆண்டிற்கு முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினர் பொதுமக்களின் நலன்கருதி பல்வேறு சிவில் நிர்வாகக்கட்டமைப்புக்களை நிர்வகித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், தமிழீழ போக்குவரத்து கழகம் இந்த நிர்வாகக்கட்டமைப்புக்களில் ஒன்றாக காணப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது, தமிழீழ போக்குவரத்து கழக நிர்வாகத்தின் மக்கள் சேவை பேருந்துகள் பல இலங்கை இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட மக்கள் சேவை பேருந்து ஒன்று தற்பொழுதும் இராணுவத்தினரின் பயன்பாட்டில் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Allgemein