மண்டைதீவு கடற்பரப்பில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட மீனவர் திடீர் மரணம்!

மண்டைதீவு கடற்பரப்பில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட மீனவர் திடீரென மயக்கமடைந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 ஆம் வட்டாரம் அல்லைப்பிட்டி பகுதியினை சேர்ந்த பொடிபாஸ் ஸ்ரான்லிலாஸ் வயது (64) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று உயிரிழந்த குறித்த நபர் தனது மைத்துனருடன் மண்டைதீவு துறைப்பகுதியில் இருந்து 1 கிலோ மீற்றர் தொலைவில் மீன்பிடித்துள்ளார்.

அவருக்கு ஒவ்வாமை காரணமாக திடிரென மயக்கம் ஏற்பட்டுள்ளது.

அவரை மைத்துனர் அழைத்துச் சென்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க முற்பட்டுள்ளார்.

எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Allgemein தாயகச்செய்திகள்