இளைஞனை திட்டமிட்டே படுகொலை செய்துள்ளதாக தெரிவித்து போராட்டம்!!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் இளைஞர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குமாறு வலியுறுத்தியும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞனின் இறுதிக்கிரியைகள் நேற்றையதினம் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் நேற்று மாலையே குறித்த கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

உயிரிழந்த இளைஞனின் நண்பர்கள், உறவினர்கள், கிராம மக்கள் இணைந்து இப்போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, குறித்த இளைஞன் திட்டமிடப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், எனவே இது தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் போரட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் வலியுறுத்தினர்.

களுவாஞ்சிகுடி பொலிஸாரின் பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

எனினும் அமைதியான முறையில் நடைபெற்ற இக்கவனயீர்ப்பு போராட்டத்தினை தொடர்ந்து சடலம் நல்லடக்கத்திற்காக கொண்டுசெல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.