மக்களின் பெயரால் அறிக்கை எழுதிய இராணுவம்!

முல்லைத்தீவு மாவட்டம் கேப்­பா­பு­ல­வில் இரா­ணு­வத்­தின் வச­முள்ள எஞ்­சிய காணி­களை விடு­விக்க வேண்­டும் என்று கோரி மீள்­கு­டி­யேற்ற அமைச்­சின் மேல­திக செய­லரி­டம் கைய­ளிக்­கக் கொண்டு சென்ற மனு இரா­ணு­வத்­தால் தடுக்­கப்­பட்­டது.

அதற்­குப் பதி­லாக அப­க­ரிக்­கப்­பட்ட காணி­க­ளுக்கு மாற்­றுக் காணி­களை அல்­லது அவற்­றுக்­கான நட்­ட­ஈடு கோரும் மனுவே மீள்­கு­டி­யேற்ற அமைச்­சின் மேல­திக செய­ல­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது என்று கேப்­பா­பி­லவு மக்­கள் குற்­றஞ்­சாட்­டி­னர்.

நட்­ட­ஈடு கோரிக் கைய­ளிக்­கப்­பட்ட மனு­வுக்­கும் தமக்­கும் எந்­தத் தொடர்­பும் இல்லை என்­றும் அவர்­கள் கூறி­னார்­கள்.

இரா­ணு­வம் கைய­கப்­ப­டுத்­தி­யி­ருந்த 133.34 ஏக்­கர் காணி நேற்று இரா­ணு­வத்­தால் விடு­விக்­கப்ட்­டது. அவற்­றில் 111.5 ஏக்­கார் காணி­கள் கேப்­பா­பி­லவு மக்­க­ளுக்­குச் சொந்­த­மா­னவை. இன்­னும் 285.5 ஏக்­கர் காணி­கள் இரா­ணு­வத்­தின் வசமே உள்­ளன.

அவற்றை விடு­விக்க வலி­யு­றுத்தி நேற்று மக்­கள் மனு ஒன்­றைக் கைய­ளிக்க முயற்­சித்­த­னர். காணி கைய­ளிப்பு நிகழ்வு நடை­பெற்ற இடத்­துக்கு மனு­வு­டன் அவர்­கள் சென்­ற­னர். அவர்­க­ளின் முயற்சி இரா­ணு­வத்­தால் தடுக்­கப்­பட்டு மனுக் கொண்டு சென்­ற­வர் அந்த இடத்­தில் இருந்து வெளி­யேற்­றப்­பட்­டார் என்று மக்­கள் கூறி­னர்.

மக்­க­ளின் மனு­வுக்­குப் பதி­லாக இரா­ணு­வம் தயா­ரித்த மனு ஒன்று மீள்­கு­டி­யேற்ற அமைச்­சின் மேல­திக செய­ல­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது என்று தெரி­விக்­கப்­பட்­டது. அதில் கேப்­பா­பி­ல­வில் விடு­விக்­கப்­ப­டா­துள்ள காணி­க­ளுக்கு மாற்­றுக் காணி­கள் தாருங்­கள். அல்­லது நட்­ட­ஈடு தாருங்­கள் என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அந்த மனு­வில் சுமார் 15 பேரின் கையெ­ழுத்­துக்­கள் உள்­ளன என்­றும் அவர்­கள் தெரி­வித்­த­னர்.

“இந்­தச் சம்­ப­வம் உண்மை. அது மறைக்­கப்­ப­டக் கூடாது. இரா­ணு­வம் கைய­ளித்­துள்ள மனு­வில் காணப்­ப­டும் கையொப்­பங்­க­ளுக்கு உரிந்­து­டை­ய­வர்­க­ளி­டம் விசா­ரித்­தேன். காணி­க­ளுக்கு நட்­ட­ஈடு தரு­மாறு ஒரு­போ­தும் கோர­வில்லை என்று அவர்­கள் கூறி­னார்­கள். இது தொடர்­பில் அவர்­க­ளி­டம் கடி­த­மும் பெற்­றுள்­ளேன். இது திட்­ட­மிட்டே செய்­யப்­பட்­டுள்­ளது.”- என்று கூறி­னார் கேப்­பா­பி­லவு காணி மீட்­புப் போராட்­டத்தை முன்­ன­கர்த்­திச் செல்­லும் ஆறு­மு­கம் வேலா­யு­த­பிள்ளை.

Allgemein