திம்புக்கோட்பாட்டின் அடிப்படையிலேயே தேர்தல் கூட்டு; சுரேஸ் தெரிவிப்பு

தமிழ் மக்கள் பேரவையால் முன்வைக்கப்பட்ட தீர்வு யோசனை அடிப்படையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் அமைக்கப்பட்ட தமிழ்த் தேசிய பேரவை தனது தேர்தலில் நிற்கின்றபோதும் திம்புக்கோட்பாடுகளின் அடிப்படையிலேயே தமது தேர்தல் கூட்டு அமைக்கப்பட்டதாகவும் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவிக்கின்றார்.

எனினும் இரண்டு தீர்வுதிட்டங்களிற்கும் இடையில் வேறுபாடுகள் இல்லாதபோதும் அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையை பேணுவதற்காகவே அம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றார்.

Allgemein தாயகச்செய்திகள்