சிவாகமஞானபானு அச்சுவேலி ச.குமாரசுவாமி குருக்களின் பணிகள் தொடர்பான ஆய்வரங்கு

அச்சுவேலி ச.குமாரசுவாமிக் குருக்களால் நிறுவப்பட்ட அச்சுவேலி சரஸ்வதி வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா எதிர்வரும் ஏப்பிரல் மாத இறுதிப்பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்நிலையில் அப்பாடசாலையின் நிறுவுநரும் தமிழ் மற்றும் சமஸ்கிருத விற்பன்னருமாகிய சிவஸ்ரீ ச.குமாரசுவாமி குருக்களின் பணிகள் பற்றிய ஆய்வரங்கை ஏற்பாடு செய்வது தொடர்பாக துறைசார்ந்த கல்வியாளர்களுடனான சந்திப்பு இன்று 27.12.2017 வாழ்நாள் பேராசிரியர் ப.கோபாலகிருஷ்ண ஐயர் தலைமையில் யாழ். பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறை விரிவுரை மண்டபத்தில் நடைபெற்றது.