வெளிநாட்டில் இருந்து 19 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்ட நிலையில், கைது!

வெளிநாட்டில் இருந்து 19 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்ற இலங்கையர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 19 பேரும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளினால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு கடத்தப்பட்ட19 பேரும் நேற்று மினுவாங்கொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது தலா 10000 ரூபாய் பிணை மற்றும் 2 இலட்சம் ரூபா 2 சரீர பிணைகளில் விடுவிக்குமாறு மினுவங்கொட நீதவான் ஷிலனி சத்துரன்தி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.

இரனவில், கொடிகாமம், திருகோணமலை, புல்மூட்டை, நீர்கொழும்பு, பேருவளை, வென்னப்புவ, உடப்பு, பொத்துவில், மூதூர் மற்றும் சிலாபம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 19 பேருக்கே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அனைவரும் மீண்டும் அடுத்த வருடம் ஜுன் மாதம் மினுவாங்கொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Allgemein