பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள இலங்கை தமிழ் இளைஞன்!

இலங்கையை சேர்ந்த 29 வயதான நவரத்தினம் புதிர்வேந்தன் என்ற இளைஞன் எதிர்வரும் ஜனவரி மாதம் மூன்றாம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளார்.

எனினும் நாடு கடத்தப்பட்டால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் என கூறி நாடுகடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் புதிர்வேந்தன் இலங்கையில் மோசமான நிலையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால் கைது செய்யப்படலாம் எனவும் அவரது குடியேற்றம் தொடர்பான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

தனது தரப்பு வாதியின் பாதுகாப்பு பற்றி ஒரு ‚புறநிலை சான்றுகள்‘ சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வழக்கினை சிறப்பு நீதிபதி விசாரிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குடிவரவு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புதிர்வேந்தனுக்கு ஆதரவாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. வழக்கின் மூலம் சாதகமான பதில்கள் கிடைக்கும் எனவும் புதிர்வேந்தன் தரப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் கடந்த மூன்று ஆண்டுகளாக Glasgow-.இல் வாழ்ந்து வந்த புதிர்வேந்தன் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டதாகவும். அதில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Allgemein உலகச்செய்திகள்