திடீர் சுகயீனம்; இரா சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதி

எதிர்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேட்பு மனுத்தாக்கல் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது திடீரென ஏற்பட்ட சுகயீனத்தினால் எதிர்கட்சித் தலைவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

எவ்வாறாயினும் அவரது உடல்நிலை வழமைக்குத் திரும்பி வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் கூறுகின்றன.

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு ஏற்றுக் கொள்ளும் பணிகள் நேற்றுடன் நிறைவுக்கு வந்தன. இதனையடுத்து தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படுகின்றன.

இது இவ்வாறிருக்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஏற்பட்ட குழப்ப நிலைக்கு இன்னும் முற்றுப்புள்ளி வைக்கப்படாத நிலையில் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தற்போது சுகயீனமுற்றதை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Allgemein தாயகச்செய்திகள்