முல்லையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி!

முல்லைத்தீவு மாவட்டத்தின், அம்பலவன் பொக்கணை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கட்டுத் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (18.12.2017) அன்று அம்பலவன் பொக்கணைப்பகுதியில் ஆரம்ப சுகாதாரப் பிரிவு நிலையத்திற்கு பின்பக்கமாக உள்ள பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கட்டு துப்பாக்கி ஒன்று கிடப்பதை, அங்குள்ளவர்கள் கண்டுள்ளார்கள்.

இதனையடுத்து, மேற்படி சம்பவம் தொடர்பில், புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்கள். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு பொலிஸார், குறித்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கட்டு துப்பாக்கியினை மீட்டுள்ளதுடன் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Allgemein தாயகச்செய்திகள்