யாழ்.போதனா வைத்தியசாலையில் இதய அறுவை சிகிச்சை வெற்றி !!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் திறந்த இதய அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியாவை சேர்ந்த 27 வயதுடைய நபருக்கே இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வெற்றிகரமாக குறித்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த நபர், தற்போது ஆரோக்கியமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட விசேட வைத்திய குழுவிற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வாழ்த்து தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Allgemein தாயகச்செய்திகள்