உலகிலேயே மிக விலையுயர்ந்த கணினியை வெளியிட்டது அப்பிள் நிறுவனம்!

அமெரிக்கக் கணினி மற்றும் நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள் நிறுவனமான, அப்பிள் நிறுவனமானது,உலகிலேயே மிக விலையுயர்ந்த கணினியை விற்பனைக்காக வெளியிட்டுள்ளது.

 

ஐமெக் ப்ரோ(IMac Pro)என்ற இந்த கணினி கடந்த ஜூன் மாதம் கணினிசார் மாநாட்டின்போது அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இதுவரை தயாரிக்கப்பட்ட கணினிகளில் இது வேகமானதும் அதிசக்தி வாய்ந்ததும் ஆகும் என்று அப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் அப்பிள் நிறுவனமானது, ஐமெக் ப்ரோவின் முழுமையான தொகுதியை 13 ஆயிரம் டொலருக்கு விற்பனை செய்யவுள்ளது. எனினும் இதன் அடிப்படைத் தொகுதியை ஐயாயிரம் டொலர்களுக்குப் பெற்றுக்கொள்ள முடியும்.

சிபியு திரை என்பன உள்ளடங்கலாக 27 அங்குல 5கே தொழில்நுட்பத் திரையுடன் கிடைக்கும் இந்தக் கணினி 18 கோர் ஸியோன் ப்ரொஸெஸரைக்(Sion Prosser)கொண்டது. இதன் கிராபிக்(Graphic)திறன், 22 டெராப்ளொப்ஸ்(Terahplops) ஆகும்.

முப்பரிமாண காட்சியமைப்பு, வீடியோ எடிட்டிங், வேர்ச்சுவல் ரியாலிட்டி(Virtual reality)அடிப்படையிலான வேலைகளுக்கு மிகப் பொருத்தமானது ஐமெக் ப்ரோ என அப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. விலையுயர்ந்த கணினியை அப்பிள் நிறுவனம் விற்பனைக்காக வெளியிட்டுள்ளது. ‚ஐமெக் ப்ரோ‘ என்ற இந்த கணினி கடந்த ஜூன் மாதம் கணினிசார் மாநாட்டின்போது அறிமுகம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Allgemein உலகச்செய்திகள்