கெய் -டெக் புயலால் 26 பேர் பலி!

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட கடும் புயலில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிலிப்பைன்ஸ் நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பிலிரான் பகுதியில் நேற்று முன்தினம் புயல்  தாக்கியது. கெய் -டெக் என்று பெயரிடப்பட்ட இந்தப் புயலால் இதுவரை 26 பேர் பலியாகியுள்ளனர். 23 பேரைக் காணவில்லை.

புயல் காரணமாக ஏற்பட்ட பலத்த மழையால் பல கிராமங்கள் மற்றும் நகரங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

39 நகரங்களில் மின் கம்பங்கள் சாய்ந்ததன் காரணமாக சாலைகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. 87,000 த்திற்கு மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Allgemein உலகச்செய்திகள்