இலங்கை மத்திய வங்கியின் இறுதி எச்சரிக்கை!

சேதமடைந்த, கிறுக்கப்பட்ட அல்லது மாற்றப்பட்டுள்ள நாணயத்தாளை மாற்றிக் கொள்வதற்காக இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னர் இவ்வாறான நாணயத்தாள்களை மாற்றிக் கொள்ள முடியும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அனுமதி பத்திரம் கொண்ட வர்த்தக வங்கிகளில் நாணயத்தாள்களை மாற்றிக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

நாணயத்தாள்களை சேதப்படுத்தல் அல்லது மாற்றுதல் 1949 இலக்க 58 ஆம் நிதி சட்டத்தின் கீழ் குற்றம் என மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்படுகின்றது.

இந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்படலாம் அல்லது அபராதம் விதிக்கப்படலாம். சில சந்தர்ப்பங்களில் இரண்டு தண்டனைகளும் வழங்கப்படலாம் என அந்த வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Allgemein