2017ஆம் ஆண்டின் „குழந்தைகளின் மகிழ்வுக்கான நத்தார்பண்டிகை“,

2017ஆம் ஆண்டின் „குழந்தைகளின் மகிழ்வுக்கான நத்தார்பண்டிகை“, பிரான்ஸ் தமிழ்விருட்சத்தின் மாணவச்செல்வங்களின் குதூகலமான கொண்டாட்டத்துடன் இன்று இரவு நமது வகுப்பு மண்டபத்தில் இனிதே நடைபெற்றது.ஆறாவது ஆண்டாக தமிழ்விருட்சத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ்,நடனம்,ஆங்கில வகுப்பு மாணவர்களுக்கான சான்றிதழ்கள் தலைவர் ஆனந்தரூபனால் வழங்கிவைக்கப்பட்டன.நத்தார்பாப்பா குழந்தைகள் அனைவருக்கும் பரிசில்கள் வழங்கி மகிழ்வூட்டினார்.பாடல்கள்,நடனங்கள் என்று மாணவர்களின் கலைநிகழ்வுகளுடனும்,விளையாட்டுகளுடனும் மிகவும் சந்தோஷமான நாளாக இன்றைய நாள் அமைந்திருந்தது.ஊக்கமாகக்கலந்துகொண்ட மாணவர்கள்,பெற்றோர் அனைவருக்கும் நிர்வாகத்தினரின் மனநிறைவான நன்றிகள்.இவர்களோடு தமிழ்விருட்சத்தின் கல்வி,கலைப்பணிகளும்,தாயகத்தில் சேவைப்பணிகளும் ஆக்கத்தோடு தொடரும் நன்றி.
நிர்வாகத்தினர்
பிரான்ஸ் தமிழ்விருட்சம்

Allgemein