யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவரின் மோசமான செயற்பாடு

யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி பகுதியிலுள்ள வீட்டில் கசிப்பு காய்ச்சிய குற்றச்சாட்டில் கடந்த 14ஆம் திகதி குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸார் குறித்த வீட்டை முற்றுகையிட்டனர். இதன்போது குறித்த பெண் தனது வீட்டினுள் கசிப்பு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் மூன்று பிள்ளைகளின் தாய் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

யுத்தம் காரணமாக தனது கணவர் உயிரிழந்துள்ளார். இதனால் ஏற்பட்ட வறுமை காரணமாக இவ்வாறு செயற்பட்டதாக பொலிஸாரிடம் குறித்த பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

Allgemein