இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கையால் அச்சம்!!

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 எனப் பதிவாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கத்தை அடுத்து இந்தோனேச்சிய அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளதாக அங்கு கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஜாவா தீவுகளில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது தலைநகர் ஜகார்த்தாவிலும் உணரப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

அமெரிக்க புவியியல் அமைப்பு சார்பில், நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 எனப் பதிவாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 91 கி.மீ ஆழத்துக்கு தாக்கிய இந்த நிலநடுக்கத்தால், பொருட்சேதம் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக இந்தோனேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

உள்ளூர் நேரப்படி நள்ளிரவை கடந்த நிலையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Allgemein உலகச்செய்திகள்