இலங்கையில் ஆபத்து!! வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்படவுள்ள தமிழ் இளைஞன்!

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கையர் ஒருவரை நாடு கடத்த வேண்டாம் என சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. குழு கோரிக்கை விடுத்துள்ளது.

அவர் நாடு கடத்தப்பட்டால் சித்திரவதைக்கு உட்படுத்தப்படலாம் என, அவுஸ்திரேலிய அரசாங்கத்தை அறிவுறுத்தியுள்ளது.

10 சுயாதீனமான மனித உரிமை நிபுணர்கள் அடங்கிய ஜெனீவாவை தளமாகக் கொண்ட குழுவினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையர் நாடு கடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடைக்கால நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 6 ஆம் திகதி குறித்த நபரை அவுஸ்திரேலியாவில் இருந்து உடனடியாக நாடு கடத்தப்படுவதற்கு குடிவரவு திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஜெய்ரான் என்ற குறித்த இலங்கையர் விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புபட்டவர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இலங்கையில் கைது செய்யப்பட்டார்.

அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கைகளுக்கு உதவுதல், பயங்கரவாத அமைப்பை ஆதரிப்பது மற்றும் உதவுதல் ஆகிய குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டார்.

சட்டவிரோதமான முறையில் ஜெய்ரான் என்ற தமிழர் அவுஸ்திரேலியா சென்றமையால், அந்நாட்டில் அகதி அந்தஸ்து கோர முடியவில்லை.

இவ்வாறன சூழ்நிலையில் குறித்த இலங்கையரை சந்தித்த ஐ.நா குழுவினரிடம் தான் இலங்கையில் கைது செய்யப்பட்ட போது அனுபவித்த சித்திரவதைகள் பற்றி தெளிவுப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் அவர் மீண்டும் இலங்கைகக்கு திருப்பி அனுப்பப்பட்டால் சித்திரவதைக்கு உட்படுத்தப்படலாம் என ஐ.நா அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Allgemein உலகச்செய்திகள்