பிரித்தானியாவில் பல பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்படும் – எச்சரிக்கை

பிரித்தானியாவின் பல பகுதிகளில் இன்றைய தினம் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு இங்கிலாந்து, வேல்ஸ், மிட்லான்ட்ஸ் ஆகிய பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு காணப்படும் என குறித்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில், 10 சென்ரிமீற்றர் முதல் 20 சென்ரிமீற்றர்வரை பனிப்பொழிவு காணப்படுமென, பிரித்தானியாவின் தேசிய வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து ஆகியவற்றிலும் பனிப்பொழிவு காணப்படுமென்பதுடன், பலத்த காற்று வீசுவதற்கும் சாத்தியக்கூறு காணப்படுகின்றதாகவும் குறிதத நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், வேல்ஸ் மற்றும் தெற்கு இங்கிலாந்தில் கடும் மழையுடன், மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுமென்று எதிர்பார்க்கப்படுவதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது..

இந்நிலையில், கடுமையான பனிப்பொழிவு காரணமாக, கிழக்கு மிட்லான்ட்ஸ் மற்றும் ச்சில்ட்ரன் ((Chiltern) ஆகிய பகுதிகளூடான புகையிரத சேவை பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாக மக்களை அவதானமாக இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Allgemein உலகச்செய்திகள்