காலா­வ­தி­யான பிஸ்­கட் விற்­ப­னைக்கு வைத்த வர்த்­த­க­ருக்குத் தண்­டம்!

சாவ­கச்­சே­ரி­யில் திகதி காலா­வ­தி­யான கோல்­டன் கவ் பிஸ்­கட் விற்­ப­னைக்கு வைத்­தி­ருந்த கைத­டிப் பிர­தேச வர்த்­த­க­ருக்கு சாவ­கச்­சேரி நீதி­மன்­றில் 3 ஆயிரம் ரூபா தண்­டம் விதிக்­கப்­பட்­டது. யாழ்ப்­பாண மாவட்ட பாவ­னை­யா­ளர் பாது­காப்பு அதி­கார சபை அலு­வ­லர்­க­ளால் கடந்த செப்­டம்­பர் மாதம் நடாத்­தப்­பட்ட திடீர்ப் பரி­சோ­த­னை­யின் போது இந்த வர்த்­தக நிலை­யத்­தில் திகதி காலா­வ­தி­யான கோல்­டன் கவ் பிஸ்­கட் விற்­ப­னைக்கு வைத்­தி­ருந்­தமை கண்டு பிடிக்­கப்­பட்டு வர்த்­த­கர் மீது சாவ­கச்­சேரி நீதி­மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டது.

வழக்கு நேற்று முன்தினம் விசா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்­ட­போது வர்த்­த­கர் குற்­றத்தை ஒப்­புக் கொண்­ட­தை­ய­டுத்து நீதி­மன்ற பதில் நீதி­வான் செ.கண­ப­திப்­பிள்ளை 3 ஆயி­ரம் ரூபா தண்­டம் விதித்­தார்

Allgemein