ஒன்று படுங்கள் அரசியல்வாதிகளே.!பாகம்(13)

அரசியல்வாதிகளை பணமும் பதவியும் பிரித்ததா…?

தமிழ்னித்தை இவர்கள் பாடையில் ஏற்ற நினைத்து விட்டார்களா..?

ஈழத்தமிழரின் அவலங்கள் தொரிந்தவர்  எமது ஈழஅரசியவாதிகள், இறுதிப்போரில் நின்று பார்த்தவர் எங்கள் அரசியல்வாதிகள்,

அத்தைனைவாழ்வின் நிலைகளைப்பார்த்தும் திருந்தாது  எமதுமக்ககளின் பிணங்களிலும் மாவீரர் தியகத்திலும் விளையாட்டு அரசில் நடத்துவது மக்களுக்கு ஆச்சரியமாக உள்ளது,

ஈழத்தின் அரசியல் களம் என்பது  எதைவைத்துக்கணிக்கப்படுகின்றது  எதற்காக இங்கே பிரிவினை வளர்க்கப்படுகின்றது
என்பதைப்பார்கும்போது எமக்கு அதிசயமும் ஆச்சரியமும் உண்டாகின்றது..?

போர்காளக்காலத்தில் வாயை பொத்தி நின்றவர்கள் இன்று புனிதர்களாக அரசியல்களத்தில்  அரச இயந்திரங்களால் நகர்த்தப்படுகின்றனவா…? அல்லது எமது  அரசியவாதிகள் பதவியிலும், பணத்திலும் தாங்கள் தன்நிறைவுகான நினைக்கின்றனரா.?

அழிந்தவன் அழியட்டும் எம் இனம்  அடியோடு ஒளியட்டும்  என்று நினைத்து  தமிழ் இனத்தின் அடிப்படை கோரிக்கைகள்மறந்து ஆட்சிக்குவந்து ஆட்டம் காட்டி  கொள்கையை மறந்து இன்று  அதர்க்கு போடு, இதற்குப்போடு  என்று புதுபுதுச்சின்னத்தோடு உங்கள் நகர்வு தமிழ் இனத்தை தானகவே அழித்துவிடும் என்பது புரியாத மந்தைகளா நீங்கள் …?

ஓணாய் ஆட்டு மந்தைகளை பிரித்து தன் நினைவை நிறைவேற்றும் அதுபோல்  சிங்கள அரசியல்வாதிகளும் அரச இயந்திரங்களும்  உங்களை பிரித்தாள நினைப்பதை  புரிந்துகொள்ள மறந்தவரா நீங்கள்,  ஆற்றலும் ஆழுமையும் இல்லாதவன்  மக்களை  ஆழும் திறமை அற்றவன்  என்பதை உணர்ந்து,

இணைந்த கரமாய் செயல்படுவீர்கள் ஆனால்  எம் தலைவன்கொள்கையும்  மாவீரர்  கனவும் மக்களின் நினைவும்  நனவாகும்

இணைவின்பலம் அறிந்து இணந்து நில்லுங்கள்

Allgemein