முல்லைத்தீவில் முன்னாள் போராளி திடீர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் கடந்த 6 நாட்களாக அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் போராளி இன்று (புதன்கிழமை) திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவில் பொறுப்பாக இருந்து புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியான பிறையாளன் என்று அழைக்கப்படும் 42 அகவையுடை இரத்தின சிங்கம் ஆனந்தராச என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

மாமடு.சேனைப்பிலவு, நெடுங்கேணியினைச் சேர்ந்த இவர் இன்று இரவு திடீரென வலிப்பு ஏற்பட்டதன் காரணமாக இவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

பிறையாளனின் சடலம் இன்று பிரரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.