பிரபாகரனின் காலில் விழாத நான் யாரிடமும் மண்டியிடேன்;மஹிந்த

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு முன்பாக முழங்காலிடாத தாம், ஸ்ரீலங்கா ஆட்சியாளர்கள் முன்னிலையிலும் முழங்காவிட மாட்டேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஏற்பாடு செய்திருந்த முதலாவது அரசியல் மக்கள் கூட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை பதுளை வின்சன் டயஸ் விளையாட்டுத் திடலில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

வலுக்கட்டாயமான மற்றும் போதையுடனான அரசியலை செய்ய வேண்டாம் என்றும் ஆட்சியாளர்களிடம் தாம் கேட்டுக் கொள்வதாக அவர் மேலும் கூறினார்.