கோத்தபாயவை கைது செய்ய நீதிமன்றம் மீண்டும் இடைக்காலத் தடை!!

தன்னை கைது செய்ய வேண்டாம் எனக் கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தாக்கல் செய்த மனு மீதான இடைக்கால தடை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.இதன்படி டிசம்பர் மாதம் 15ஆம் திகதி வரை இந்த இடைக்கால தடையை நீடித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.டி.ஏ. ராஜபக்ஸ தம்பதியினரின் நினைவுத் தூபி அமைப்பதற்கு பொதுமக்கள் பணம் கையாடப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி புலனாய்வுப் பிரிவினர் கோத்தாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கோரி கோத்தபாய ராஜபக்ஸ மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.இந்தக் கோரிக்கைக்கு அமைய இன்று வரையில் சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.இந்த நிலையில், இன்று குறித்த மனு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இடைக்கால தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

Allgemein