இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு அரசின் அதிரடி அறிவிப்பு!

வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு வரி இல்லாத பொருட்களை பெற்றுக் கொள்ளும் வாய்பை இலங்கை அரசாங்கம் வழங்கவுள்ளது.

இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கொள்வனவு செய்யும் பொருட்களுக்காக அறவிடப்படும் வட் வரியை மீளவும் அவர்களிடம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வெளிநாட்டு பயணிகளிடம் வரிக்குரிய பணத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீர்மானம் அடுத்த வருடம் மே மாதம் முதலாம் திகதியில் இருந்து செயற்படுத்தவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையை சர்வதேச வர்த்தக கேந்திர நிலைமையாக மாற்றும் நோக்கத்தில் வெளிநாட்டவர்களிடம் அறவிடப்படும் வட் வரியை மீளவும் வழங்கும் முறை அறிமுகப்படுத்தி வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விமான நிலையத்தில் வெளிநாட்டு கடவுச்சீட்டு மற்றும் குறித்த பொருட்களுக்காக விலைப்பட்டியலை சமர்ப்பித்து அந்த வரிப் பணத்தை மீளவும் பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சர் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கை விமான நிலையம் மற்றும் துறைமுகத்தில் செயற்படுத்தப்படவுள்ள நிலையில், சிங்கப்பூர் உட்பட பல வெளிநாடுகளில் இந்த முறை காணப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

Allgemein