அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை பெற்றுக்கொடுக்குமாறு பணிப்பு!

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, உடனடியான உதவிகள் மற்றும் நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்குமாறு ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால், மாவட்டச் செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

கடும்காற்றுகாரணமாக, பலபிரதேசங்களிலும் உள்ள பொதுமக்களின் வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமரின் ஆலோசனைகளுக்கமைய, உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என, உள்ளூர் விவகார அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

இதேவேளை, அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துள்ள மக்களுக்கு உதவுவதற்காக, முப்படையினர் தயார்நிலையில் இருக்கின்றனர் என, இராணுவப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன தெரிவித்தார்.

இதற்காக, 2000 படையினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவப்பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

Allgemein