ஈழத்தமிழரான டாக்டர் உமேஸ்வரன் ஜேர்மன் மொழியில் எழுதப்பட்ட Der Fremde Deutsche (Bild )

இன்று ஜேர்மன் நாட்டில் வெளிவரும் பிரபலமானதும் அதிக விற்பனையைக் கொண்டதுமான Bild எனப்படும் நாளாந்தப்பத்திரிகை இங்கு வாழும் ஈழத்தமிழரான டாக்டர் உமேஸ்வரன் அருணகிரிநாதன் என்பவரால் ஜேர்மன் மொழியில் எழுதப்பட்ட Der Fremde Deutsche (அன்னிய தேசத்து ஜேர்மனியர் )என்னும்நூலை அறிமுகப்படுத்தும் முகமாக அரைப்பக்கத்துக்கு மேற்பட்ட விபரணக் கட்டுரை ஒன்றைப் பிரசுரித்திருந்தது.அதில் உள்ள விடயங்கள் அத்தனையும் மொழிபெயர்க்காவிட்டாலும் சாராம்சத்தை மாத்திரம் கூறுகின்றேன் .நாம்பொதுவாக இங்கு வாழும் அகதிகள்பற்றி எதிர்மறையானதும் தவறானதுமான செய்திகளையே அதிகமாகக் கேள்விப்பட்டிருக்கிறோம் ,ஆனால் இன்றுநாம் விசேடமான நல்லதொரு உதாரணத்தை அறிமுகம் செய்யப்போகின்றோம் .அதாவது 91ம் ஆண்டு அகதியாக தனிமையில் வந்து தனது வைத்தியராகவேண்டும் என்ற வாழ்நாள்கனவை நனவாக்கி இன்று இதய அறுவைச் சிகிச்சை நிபுணராக(Bad Neustadt)எனும் ஜேர்மன் நகரில் கடமையாற்றும் டாக்டர் உமேஷ் அவர்கள் தனது வாழ்வனுபவங்களைப் பற்றி தான் எழுதிய இந்த நூலில் பகிர்ந்து கொண்ட விடயங்களைச் சுருக்கமாக இப்பத்திரிகை பிரசுரித்துள்ளது.இங்கு வாளும் தமிழர்கள் நாம் பெருமைப்படவேண்டிய விடயம் இது .மேற்படி நூல் விரைவில் தமிழிலும் வரும் என எதிர்பாற்போம்.இந்தச்செய்திக்கு இவ்வளவு முக்கியம் கொடுத்துப்பிரசுரித்தBild பத்திரிகைக்கும் ,சாதனையாளர் டாக்டர் உமேஸ்வரன் அவர்களின் மேற்படி நூல் சிறந்த வெற்றியைத்தரவும் மனம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

Allgemein தாயகச்செய்திகள்