உணர்வுபூர்வமாக தமிழர் தாயகமெங்கும் மாவீரர் தின நிகழ்வுகள் சிறப்புற நடந்தேறின.

உணர்வுபூர்வமாக தமிழர் தாயகமெங்கும் மாவீரர் தின நிகழ்வுகள் சிறப்புற நடந்தேறின.
தமிழீழ போரியல் வரலாற்றின் அத்திவாரக்கற்களான மாவீரத்தெய்வங்களை மனதுருகி பூசிக்கும் திருநாளின்று.

அலையலையாக திரண்ட மக்கள் கூட்டம் தங்கள் வீரப்புதல்வர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செய்து மனமுருகி அழுதனர்.

அவர்களின் தியாகங்கள் என்றும் வீண்போகாது என்பதை இந்த மாவீரர்நாள் உணர்த்தி நிற்கிறது. மக்கள் புரட்சி வெடிக்கட்டும்.சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்ற தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் வாய்ச்சொல் மெய்நிலை கண்டிருக்கிறது மீண்டும் எட்டு ஆண்டுகளின் பின்னர்.


நிச்சயமாக தமிழனின் தீராத தாகமான தமிழீழமும் மலரும் ஒருநாள். ஏனென்றால் அத்தனை ஆயிரம் உயிர் விலைகளுக்கும் ஒரு சக்தி இருந்தாகவேண்டுமல்லவா.


இன்று முல்லைத்தீவு மாவட்டம் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலியை செலுத்தி  பல்லாயிரம் மக்களோடு நம்புவோம். நடை தளரோம்.

Allgemein மாவீர்வீரவணக்க நாள்