துருக்கியின் தென்பகுதியில் அமைந்த சுற்றுலா நகரான முக்லாவில் பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் துருக்கி நேரப்படி இரவு 8 .22 க்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவு கோலில் 5 புள்ளிகளாக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
முக்லா நகரின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஏஜியன் கடலில் சுமார் 31 கிலோமீற்றர் தூரத்தில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியில் கடந்த 2011ஆம் ஆண்டு 7 புள்ளி 2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் சுமார் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.