“உத்தர தேவி” மீது தாக்குதல்!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பஸ் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நோக்கி சென்ற “உத்தர தேவி” ரயில் மீது நேற்றிரவு 7.30 மணியளவில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை வரை பயணித்த ரயில் மீது சுன்னாகம் ரயில் நிலையத்தில் இருந்து அரை கிலோ மீற்றர் தூரத்தில் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில் சாரதியினால் சுன்னாகம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த சந்தர்ப்பத்திலேயே சுன்னாகம் பொலிஸாரினால் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும், ஒருவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கல்வீச்சு தாக்குதலினால் ரயிலில் பயணித்த ஒருவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும் சாரதியின் ஆசனத்திற்கு அருகில் உள்ள ஜன்னல் உடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Allgemein