தேசியகொடியை ஏற்ற மறுத்த அமைச்சர் சர்வேஸ்வரனுக்கு சட்ட நடவடிக்கை ?

வட மாகாண கல்வி அமைச்சர் எஸ்.சர்வேஸ்வரன் தேசியக் கொடியை ஏற்ற மறுத்த விவகாரம் தொடர்பில், சட்ட மா அதிபரின் ஆலோசனையின் படி, நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே கூறியுள்ளார்.

நாளை இது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில், வவுனியா பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட, சர்வேஸ்வரன், இலங்கை தேசியக் கொடியை ஏற்ற மறுத்தார்.

பல்லின மக்கள் வாழ்கின்ற இலங்கையின் தேசிய கொடியில் சிறுபான்மையினருக்கு உரிய இடம் வழங்கப்படவில்லை என்பதற்காகவே தான் தேசிய கொடியை ஏற்ற மறுப்பு தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் தேசிய கொடி சிங்கள பௌத்த மதத்தை பிரதிபலிக்கும் வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளதாகவும் வட மாகாண கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.

Allgemein