இறுதி கணத்தில் முடிவை மாற்றிய முதலமைச்சர்!

தமிழ் மக்கள் பேரவை இணைத்தலைமைகளிற்கு அழுத்தங்களை கொடுப்பதன் மூலம் புதிய கூட்டணியிற்கு ஆதரவு இல்லையென்ற பிரச்சாரத்தை முன்னெடுக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி அம்பலமாகியுள்ளது. இதன் பின்னணியினில் புளாட் சித்தார்த்தனை தமிழரசு களமிறக்கியமை அம்பலமாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தினில் உருவாகியுள்ள கூட்டணி மற்றும் அரசியல் போக்கு தொடர்பினில் கொழும்பில் அவசர கூட்டத்தை சம்பந்தர் கூட்டியிருந்தார்.இக்கூட்டத்திற்கு கொழும்பு பத்திரிகை துறையின் தமிழ் நாளிதழ் விசுவாசிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.யாழ்ப்பாணத்திலிருந்து வித்தியாதரனும் அழைக்கப்பட்டிருந்தார்.

தமிழ் மக்கள் பேரவை மற்றும் புதிய கூட்டணி பற்றி பேசிய சம்பந்தன் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தனது பக்கமிருப்பதாக தெரிவித்துள்ளார்.எனினும் அதனை சில நாளிதழ் ஆசிரியர்கள் மறுதலித்துள்ளனர்.

இதனிடையே சித்தார்த்தனும் முதலமைச்சர் தம்பக்கமிருப்பதாக தெரிவித்திருந்ததுடன் கூட்டணிக்கு எதிராக அறிக்கையினை விடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.இதனை தனது ஆதரவு ஊடகவியலாளர்களிடமும் பகிர்ந்துள்ளார்.

எனினும் முதலமைச்சர் தனக்கெதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் அப்போது பிரஸ்தாபித்துள்ளார்.அத்துடன் எதிராக குரல் கொடுப்பதை தவிர்த்துள்ளார்.எனினும் அரசியலில் ஈடுபடாத போதும் அதன் எழுக தமிழ் பிரகடனத்தை முன்னெடுக்கும் தரப்புக்களை ஆதரிக்க பேரவையின் ஏற்பாட்டுக்குழு தீர்மானித்துள்ளமை பற்றி அப்போது முதலமைச்சரிற்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் தமிழ் மக்கள் பேரவையில் இடம்பெறும் அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதையோ அன்றி அவை தமக்குள் தேர்தல் கூட்டுச் சேர்வதையோ தமிழ் மக்கள் பேரவை தடுக்காது.

தமிழ் மக்கள் பேரவையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் பேர வையின் பெயரை விடுத்து சுயமாகத் தாம் போட்டியிட நினைத்தால் அதனைத் தடுத்து அவர்களின் தனிமனித சுதந்திரத்தில் பேரவை தலையிடாது .

தேர்தல் அரசியலில் ஈடுபடுவதில்லை என்ற பேரவையின் கொள்கையில் உறுதியாக இருப்பதுடன் பேரவை தயாரித்த தீர்வுத் திட்ட வரைபு உள்ளிட்ட தமிழ் மக்களின் உரிமைசார் கொள்கையில் பேரவை என்றும் உறுதியாக இருக்கும் எனவும், தேர்தல் என்பது மக்களின் ஆணையைப் பெறுகின்ற தீர்ப்பு என்பதால், தமிழ் மக்கள் தமது வாக்குகள் மூலம் வழங்கும் தீர்ப்புகளை பேரவை மதிப்போடு ஏற்றுக்கொள்ளும் எனவும் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

Allgemein தாயகச்செய்திகள்