தென்மராட்சி கல்வி வலயம் நடத்திய தமிழ்த்தின விழா

தென்மராட்சி கல்வி வலயம் நடத்திய தமிழ்த்தினப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கலும் பாராட்டு நிகழ்வும் 17.11.2017 வெள்ளிக்கிழமை மாலை சாவகச்சேரி மகளிர் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் சு.சுந்தரசிவம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக நான் கலந்து கொண்டேன்.
.
சிறப்பு விருந்தினர்களாக தென்மராட்சிக் கல்வி வலயத்தில் பணியாற்றி இந்த ஆண்டு ஓய்வு பெற்ற தமிழாசிரியர்களான ச.மார்க்கண்டுஇ ம.மகேசன்இ க.சுரேந்திராஇ இ.ஜீவேந்திராஇ ற.திருஞானசம்பந்தமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் வலய, மாகாண, தேசிய நிலைத் தமிழ்த்தினப் போட்டிகளில் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவர்கள் சான்றிதழ்கள் வழங்கியும் நினைவுக்கேடயங்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் வரவேற்புரையை சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் வே.உதயகுமாரும் வாழ்த்துரையை தமிழ்ப்பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் க.ஸ்ரீதரனும், நன்றியுரையை தமிழாசிரியர் சுந்தரமூர்த்தியும் வழங்கினர்.
.
தமிழ்த்தினப் போட்டிகளில் தென்மராட்சி சார்ந்து பங்கேற்று வெற்றிகளைப் பெற்ற கலை நிகழ்வுகள் மேடையேற்றப்பட்டன.
தென்மராட்சியின் தமிழ்ப்பாட வளர்ச்சிக்காகப் பங்களித்தமைக்காக சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் நினைவுக் கேடயங்கள் வழங்கப்பெற்றுக் கௌரவிக்கப்பட்டனர்.