துயர் பகிர்தல் அமரர் உருத்திரமூர்த்தி பிரசாத்

அமரர் உருத்திரமூர்த்தி பிரசாத்
மண்ணில் : 9 ஒக்ரோபர் 1988 — விண்ணில் : 18 நவம்பர் 2016

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், வவுனியா, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த உருத்திரமூர்த்தி பிரசாத் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் வாழ்வில் ஒளியேற்றி
பிரகாசிக்க வந்துத்த பிரகாஷே
என்றென்றும் நீர் எம்முடனே
வாழ்ந்திருப்பீர் என்றிருந்தோம்
இடைநடுவில் எமைவிட்டு
இறைவனடி சென்றீரோ

குடும்பத் தலைவனின்றி
நாம் நிலைகுலைந்து நிற்கையிலே
வாழ்க்கைப் படகிற்கு துடுப்பாக நின்றீரே

எல்லோருக்கும் வழிகாட்டி
எமை வாழ வைத்தீரே
பண்பிலே உயர்ந்தவனாய்
பழகுவோர்க்கு இனியவனாய்
பாசமுள்ள சகோதரனாய்
அன்பிலே சிறந்தவனாய்

உற்றார் உறவுகளை உன் பக்கம் ஈர்த்தவனே
எமை விட்டு சென்றின்று ஓராண்டு ஆனதுவே
ஓராண்டென்ன ஓராயிரம் ஆண்டானாலும்

மறவாதையா உங்கள் நினைவு
ஓராண்டென்ன உயிருள்ளவரை
அஞ்சலிப்போம் உம் ஆத்மா சாந்திபெற

ஓம், சாந்தி, சாந்தி.

உன் பிரிவால் துயறுரும் அம்மா, சகோதரிகள், சகோதரன், உறவினர்கள்.
தகவல்
குடும்பத்தினர்
** இந்த அறிவித்தல் 461 தடவைகள் பார்வையிடப்பட்டுள்ளது

Allgemein துயர் பகிர்தல்