வாள்வெட்டுக் கும்பல்களுக்கும் பொலிஸார் சிலருக்கும் தொடர்பு! வடக்கு மாகாண ஆளுநர்! (Video)

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் நான் என்ன செய்வது? என கேள்வி எழுப்பிய வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, இது தொடர்பில் பொலிஸ்மா அதிபருடன் பேசுவதாகத் தெரிவித்தார்.

மேலும் வாள்வெட்டுக் கும்பல்களுக்கும் பொலிஸாரில் சிலருக்கும் தொடர்பு இருக்கும் எனக் குறிப்பிட்ட ஆளுநர், இந்த நிலமை தெற்கிலும் உள்ள ஒன்றுதான் என்றார்.

யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று காலை இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பத்திரியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஆளுநர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வாள்வெட்டுக் கும்பல்களின் அச்சுறுத்தல்கள் – அடாவடிகள் அதிகரித்துள்ளன. அவற்றைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸார் அசமந்தமாகச் செயற்படுகின்றனர் எனக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

அத்துடன், அந்தக் கும்பல்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பிருப்பதாகவும் மக்கள் மத்தியில் கருத்துக்கள் உள்ளன. இந்த நிலையிலேயே வடக்கு மாகாண ஆளுநர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

Allgemein