வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த எழிலன்: வழக்கு விசாரணை இன்று!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் மற்றும் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் உள்ளிட்ட பன்னிரண்டு பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று (வியாழக்கிழமை) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இடம்பெற்றது.

இதில் எழிலன் உள்ளிட்ட ஜவர் தொடர்பான வழக்கு நடைபெற்று வந்துள்ள நிலையில் அதன் எழுத்து மூலமான அறிக்கை இன்று நீதிமன்றில் சட்டவாளர் கே.எஸ்.ரட்ணவேல் கையளித்துள்ளார். அத்தோடு எழிலன் உள்ளிட்ட 5 பேரின் வழக்கு தொடர்பான அறிக்கை வவுனியா மேல் நீதிமன்றுக்கு அனுப்பப்படவுள்ளது.

அடுத்த கட்டமாக மீதி 7 பேரினதும் ஆட்கொணர்வு மீதான வழக்கு விசாரணை எதிரவரும் ஜனவரி 2018 ஆம் ஆண்டு 4 ஆம் திகதிக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் பதில் நீதிபதி சுதர்சன் தலைமையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

Allgemein தாயகச்செய்திகள்